நூலகம்

நூலகத்தில் மாணவர்களுக்கு கீழ்கண்ட புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

 • சட்டப்புத்தகங்கள்
 • நாளிதழ்கள்
 • சட்டஇதழ்கள்

நூலகவிதிகள்

படிக்கும்பகுதி

 • நூலகத்திற்குள் நுழையும்போது தன் உடைமைகளை நுழைவாயிலில் உள்ள அறையில் வைக்கவேண்டும்.
 • ஒவ்வொரு மாணவரும் தன் பெயர், வகுப்பு மற்றும் நூலகத்திற்கு வருகைதரும் நேரம் ஆகியவற்றை நுழைவுப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 • மாணாக்கர்கள் நூலக வளாகத்தில் முற்றிலும் அமைதிகாக்க வேண்டும்.
 • மாணாக்கர்கள் படிக்கும் பகுதியை விட்டுச்செல்லும் போது புத்தகங்களை திரும்ப கொடுத்து விட்டு தன் உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
 • நூலகத்தில் தொலைந்த மாணாக்கர்களின் உடைமைகளுக்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்காது.
 • மாணாக்கர்கள் வெளியில் செல்லும் போது நேரத்தை நுழைவுப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

புத்தகங்கள்பெறும்பகுதி

 • ஒவ்வொரு மாணவரும் இரண்டு புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
 • புத்தகங்கள் கோறும் மாணாக்கர்கள் விண்ணப்பத்தில் புத்தகத்தின் பெயர் மற்றும் எழுத்தாளர் பெயர் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும்.
 • எடுத்துச் செல்லும் புத்தகங்களை 30 நாட்களுக்குள் திரும்ப நூலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
 • புத்தகங்கள் தொலையும் பட்சத்தில் மாணவர்களே பொறுப்பாவார்கள்.
 • புத்தகங்களை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தாதபட்சத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.1 அபராதம் விதிக்கப்படும்.