முதல்வர் உரை

திரு.தி.ரா.அருண் எம்.ஏ.எம்.எல்.

தமிழக அரசின் 24.07.2019-ஆம் நாளிட்ட சட்டத்துறை அரசாணை எண்.142-இன் மூலமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைகழக இணைவாக அரசு சட்டக் கல்லூரி நாமக்கல் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மற்றும் அதனை சார்ந்திருக்கும் கிராம மாணவர்களின் நலனுக்காக இக்கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரியில் தற்போது ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்புகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிறந்த கல்வி திறன் உடைய கல்வியாளர்களை கொண்டு சட்டக் கல்வியை வழங்குகிறது. இக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டி வாய்ப்புகளுக்கு வழிகாட்டப்பட்டு சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் அதற்கு ஏதுவாக மாணவமணிகள் உற்சாகமாக ஈடுபட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் இக்கல்லூரியின் சட்ட உதவி மையத்தின் மூலமாக சாமானிய மக்களுக்கு அவர்களின் அடிப்படை சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஏறு நடைப்போடும் ஏற்றமிகு சட்டக் கல்வியில் வீறு நடை போட மாணாக்கர்களின் ஆற்றல்களை வளர்க்கும் கல்லூரியாக இக்கல்லூரி திகழ்கிறது.

© Copyright - Government Law College, Namakkal